3
மன்னாரில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
மன்னார் தோட்டக்காடு பகுதியில் புகையிரத கடவைக்கு அருகில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.