யாழை சேர்ந்த வாடகை வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளை

by smngrx01

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 

வாகன வாடகை தரிப்பிடத்திற்கு வந்த இருவர் , கிளிநொச்சி பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வர வேண்டும் என கூறி வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். 

இடையில் பரந்தன் பகுதியில், வீதியோரமாக வாகனத்தை நிறுத்த கோரி , அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி,  சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர். 

அதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரமாக நீண்ட நேரமாக வாகனத்தில் சாரதி அசைவின்றி காணப்பட்டதை அவதானித்தவர்கள் , சாரதியின் அருகில் சென்று பார்த்த போது , சாரதி மயக்கத்தில் இருப்பதனை அறிந்து உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர் 

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே சாரதி சுயநினைவுக்கு வந்துள்ளார். அதன் பின்னரே தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்