சேருநுவர பகுதியில் சொகுசு பஸ் கோர விபத்து; 14 பேர் வைத்தியசாலையில்!

by admin

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமிற்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

மழை காரணமாக குறித்த பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று நள்ளிரவு 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், அப்போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பேர் காயமடைந்து சேருநுவர வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர்.

அவர்களில் 09 பேர் கொண்ட குழுவொன்று மேலதிக சிகிச்சைக்காக பின்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்