சீரற்ற வானிலையால் நாட்டில் அரிசி அறுவடை பாதிப்பு – விவசாயிகள் கவலை நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விவசாயிகள் அரிசியை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அவ்விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
சீரற்ற வானிலை காரணமாக அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி தற்பொழுது பயிர்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
விதைத்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நோய்த் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல் நிலங்களை பார்வையிட்ட அதிகாரிகள் உரிய வகையில் தமக்கான அழிவுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
ஒரு சிலருக்கு மாத்திரமே அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு எந்தவித பதிலையும் வழங்காதுள்ளனர்.
இம்முறையும் பாரிய அளவிலான அழிவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளான நாங்களும் தற்பொழுது அரசியை கடையிலேயே கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இம்முறையாவது விவசாய காப்புறுதி கூட்டுத்தாபனம் உரிய வகையில் பார்வையிட்டு எமக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான கொடுப்பவை வழங்க வேண்டும்.
இல்லாவிடில் தொடர்ச்சியாக நெற்செய்கை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.