3
குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றின் முன்னே உள்ள சிறிய நீர் குளத்தில் விழுந்து ஒரு வயதும் 7 மாதமும் நிரம்பிய குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும் தந்தையும் வீட்டில் இருந்த தருணத்தில், வீட்டின் முன் திறந்தவெளியில் உள்ள நீர் குளத்தின் அருகே குழந்தை இருந்ததாகவும், சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தேடியபோதே குழந்தை நீரில் வீழ்ந்துள்ளமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குழந்தையின் சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.