by adminDev2

மட்டக்களப்பில் குளங்களின் வான்கதவுகள் திறப்பு குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ! on Sunday, January 19, 2025

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 9 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள நவகிரிகளம், புனானை அனைக்கட்டு, வடமுனைகுளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம். வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்த குளங்களின் தேவைக்கு ஏற்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

அதேவேளை உன்னிச்சைக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிக்கு உயர்ந்ததையடுத்து குளத்தின் 3 வான் கதவுகள் தலா 6 அடி உயரத்துக்கு மூன்று வான்கதவுள் திறக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழை பெய்து குளத்தின் வான்கதவுகள் மேலும் அதிகளவில் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என அதன் நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் தெரிவித்தார்

இதேவேளை இந்த உன்னிச்சை வான் கதவு திறக்கப்பட்டமைதயடுத்து வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து வேளாண்மைகள்யாவும் பாதிப்படைந்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகள் இன்று இரவு வெள்ளத்தால் மூழ்கும் அபாய நிலை தோன்றியுள்ளதுடன் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றை அண்டிய மற்றும் தாழ்நிலபகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் நீர் மட்டம் அதிகரித்தால் தாழ்நில பகுதிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும்.

குளங்கள், நீர் நிலைகள் கடல், ஆறுகளில் நீராடுவதை தவிர்க்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமான செயற்படுமாறு மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்