3
on Sunday, January 19, 2025
தென்னந்தோட்டத்தில் உள்ள களஞ்சியசாலையின் கதவு உடைக்கப்பட்டு 450 தேங்காய்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பிபில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பிபில பொலிஸ் பிரிவின் மஹியங்கனை வீதிக்கு அருகிலுள்ள தென்னந்தோட்டத்தில் இருந்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 450 தேங்காய்கள் திருடப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேங்காய்களுடன், தேங்காய்களை உரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரும்புத் தூண் மற்றும் மண்வெட்டியும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மொனராகலை நகரைச் சேர்ந்த நில உரிமையாளர் தென்னை நிலத்தைப் பார்வையிட்டபோது, களஞ்சியசாலையின் கதவு உடைக்கப்பட்டு காலியாக இருந்தது. அங்கிருந்து தேங்காய்களை களவாடி சென்றுள்ளமை அடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.