சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபர் மும்பை பொலிஸாரால் கைது!

by wamdiness

கடந்த வாரம் போலிவூட் நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரை மும்பை பொலிஸார் இன்று (19) அதிகாலை மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

மொஹமட் அலியன் என்ற தாக்குதல்தாரி, நடிகரின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு பிஜோய் தாஸ், விஜய் தாஸ், மொஹமட் இல்யாஸ் மற்றும் பிஜே என பல பெயர்கள் இருப்பதாகவும் அவர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த வியாழக்கிழமை (16) அதிகாலை சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்தில் நடந்த திருட்டு முயற்சியின் போது 54 வயதான நடிகர் கத்தியால் பல முறை குத்தப்பட்டார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக மும்பை லீலாவதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சைஃப் அலிகானுக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர்கள் குழு, நடிகர் குணமடைந்து வருவதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக சனிக்கிழமை (18) கூறியது.

தொடர்புடைய செய்திகள்