3
யாழ்ப்பாணத்தில் நகைக்கடையொன்றில் தம்மை வருமான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் என அடையாளப்படுத்தி 30 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட கும்பலின் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றது. மூவரடங்கிய கும்பல் சிவில் உடையில் நகைக்கடையில் புகுந்து, கண்காணிப்பு கமரா உபகரணங்களை அகற்றிய பின்னர், பணத்தையும் நகைகளையும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறி தப்பிச் சென்றது.
பிரதான சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டதன் பின்னர், மூவரும் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.