மலேசியாவை 23 ஓட்டங்களுக்குள் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றி!

by wamdiness

ஐசிசி மகளிர் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது ஆட்டத்தில் மலேஷியா மகளிர் அணியை 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி வெற்றி கொண்டது.

கோலாலம்பூரில் இன்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்ளில் 162 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசிய மகளிர் அணியானது 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்த வெற்றியுடன் குழு ஏ யில் இலங்கை அணி 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Related

Tags: MalaysiaSri Lankaஇலங்கைமலேசியா

தொடர்புடைய செய்திகள்