கிழக்குப் பல்கலைகழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ! on Sunday, January 19, 2025
கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும்
விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் நடத்தப்பட்ட டிப்ளோமா மற்றும்
சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று 78.07.2023
சனிக்கிழமை இழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு தொழிநுட்ப பூங்கா கேட்போர் கூடத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராகிரியர் எஸ். ஜெயராஜா தலைமையில் விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் “விவசாயத்தில்” 60 பேரும் “தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் 16 பேரும் “ஆய்வுக்கூட தொழிநுட்பத்தில்” 04 பேரும் “பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சேவை வழங்கலின் மூலம் அமைதியை பேணுதல்” பாட நெறியில் 09 பேரும் டிப்ளோமா சான்றிதழ்களை இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் திருமலை வளாக முதல்வர் பல்கலைக்கழக பீடாதிபதிகள் கல்வி சார் சாரா ஊழியர்கள் கலநது சிறப்பித்தனர்.