திருட்டு மரவெட்டில் யார்?

by adminDev2

வடமராட்சி கிழக்கையும் இயக்கச்சியையும் இணைக்கும்  கொடுக்குளாய் -இயக்கச்சி அபாயவெளி பாதையின் இரு மருங்கிலும் காணப்பட்ட சிலமரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்பட்டுள்ளன.

கொடுக்குளாய் இயக்கச்சி பாதை உடைப்பெடுத்து வரும் நிலையில் இரு மருங்கிலும் இயற்கையாக மண் அரிப்பினை தடுக்கும் வகையில் காணப்பட்ட மரங்களை அழித்தமையே காரணம் என்று மக்களால் குற்றம்சாட்டப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் காணப்படும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது 

இதனால் அபாயவெளி பாதை உடைப்பெடுக்கும் நிலை காணப்படுவதால் அந்த வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாஸ்கரன் என்பவரிற்கு சொந்தமான தனியார் நிறுவனமான றீச்சா நிறுவனத்திற்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் மரங்கள் வெட்டி ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதால் தொடர்ச்சியான மரங்கள் வெட்டப்படுவதில் அத்தரப்பே உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்