மட்டக்களப்பு – வவுணதீவு வயல்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; சந்தேகநபர

by wamdiness

மட்டக்களப்பு – வவுணதீவு வயல்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; சந்தேகநபர்கள் தப்பியோட்டம் on Saturday, January 18, 2025

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17) பொலிஸார் முற்றுகையிட்டனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு உற்பத்தி நிலைய முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 14 பீப்பாய் கோடாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்