காணொளிக் குறிப்பு, இஸ்தான்புல்: விமானத்தின் கார்கோ பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆறு மாத கொரில்லா குட்டி

விமானத்தில் கடத்திச் செல்லப்பட்ட 6 மாத கொரில்லா குட்டி மீட்பு – காணொளி

கடந்த டிசம்பர் மாதம், நைஜீரியாவிலிருந்து தாய்லாந்து சென்ற ஒரு ஒரு விமானத்தின் கார்கோ பகுதியில், குட்டி கொரில்லா ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

ஒரு பெட்டிக்குள் அடைத்துவைத்து, கடத்தப்பட்ட இந்த குட்டி கொரில்லாவை இஸ்தான்புல் விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த கொரில்லாவின் வயது, ஆறு மாதங்களே.

மோசமான பயணத்தின் தாக்கத்திலிருந்து மீள, ஒரு உள்ளூர் உயிரியல் பூங்காவிற்கு இந்த கொரில்லா கொண்டு செல்லப்பட்டது.

இஸ்தான்புல், சர்வதேச பயணங்களுக்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளதால், கடத்தப்படும் விலங்குகளை அதிகாரிகள் மீட்கும் சம்பவங்கள் இங்கு அதிகரித்துள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.