அங்கீகரிக்கப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர் பரீட்சை நாளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் அமைச்சினால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர் பரீட்சை நாளை சனிக்கிழமை (18) இடம்பெறவுள்ளது.
01.08.2023 முதல் 31.08.2024 வரை அங்கிகரிக்கப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை நாளை கொழும்பு 10, ஆனந்த வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல், பரீட்சை அட்டவணை www.moj.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பரீட்சை நுழைவுச் சீட்டுகளை மேற்படி இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பில் மேலதிக விபரங்களுக்கு 0112-446185 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.