க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தால் வீதி விபத்துக்களில் வீழ்ச்சி!

by wp_shnn

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளினால் நாளாந்தம் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் நாளொன்றுக்கு ஒன்பதில் இருந்து இரண்டாவது ஆகக் குறைந்துள்ளது.

சில நாட்களில் எந்தவித உயிரிழப்பும் வீதி விபத்துக்களினால் பதிவாகவில்லை.

அத்துடன், கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை.

இது வீதிப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்