2
சி.ஐ.டிக்கு பின்கதவால் வந்தார் கோட்டாபய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சற்று முன்னர் வந்தார். அவர் சிஐடியின் பின்புற வாயிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
கதிர்காமத்தில் உள்ள ஒரு காணிப் பிரச்சினை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை சிஐடி அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது