சயீப் அலி கான் மீதான கத்திகுத்து; ஒருவர் கைது!

by wp_fhdn

போலிவுட் நடிகர் சயீப் அலி கான் (Saif Ali Khan) மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபரை மும்பை பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் அடையாளம் காணப்படாத அந்த நபர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவரைப் போன்ற பலரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய பின்னர் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சயீப் அலி கான், வியாழன் அதிகாலை அடையாளம் தெரியாத ஒருவருடன் அவரது இல்லத்தில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டார்.

இதையடுத்து, மும்பையின் லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தற்சமயம் குணமடைந்து வருகிறார்.

மும்பை பாந்த்ராவின் உயர்மட்ட சுற்றுப்புறத்தில் உள்ள நடிகரின் வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் ஒரு திருட்டு நோக்கமாக இருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்