கடலில் நீராடச் சென்ற கனேடியர் மாயம்!

by wp_fhdn

நேற்று (16) மாலை ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

19 வயதான கனேடியர் ஒருவரே காணாமல் போனவர் ஆவார்.

இவர் குளிக்கச் சென்ற இடத்தில் அபாய பதாகை வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் கடலில் குளிக்கச் சென்றமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரின் உயிர்காக்கும் படையினரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

தொடர்புடைய செய்திகள்