சம்மாந்துறை எஸ் வாய்க்கால் வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு கோரிக்கை ! on Thursday, January 16, 2025
(தில்சாத் பர்வீஸ் )
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதான வீதியை இணைக்கும் S வாய்க்கால் வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024.11.26 திகதி பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த வீதியைப் பற்றி உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை, என பிரதேச வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
செட்டவட்டை, பூரான் புட்டி வட்டை போன்ற வயல் பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதை இதுவாகும். அதுமட்டுமின்றி,இப் பகுதியில் காணப்படும் பொதுமக்கள் இவ்வீதியின் ஊடாக பாடசாலை, வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் போன்ற இடங்களுக்கு இப்பாதையை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முதல் பெய்த கனமழை காரணமாக, பல வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தது, அதிகாரிகள் பலர் நீரில் மூழ்கிய நிலங்களை பார்வையிட்டு சென்ற போதும், இது வரை எந்த நஷ்ட ஈடும் அரசாங்கம் வழங்கவில்லை, என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.