2
கடன்களைத் திருப்பிச் செலுத்த அரசாங்கத்தால் நிவாரணப் பொதி ! on Thursday, January 16, 2025
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியைத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் பிரதிநிதிகள் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் இணைந்து, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது