by adminDev2

அபாய கட்டத்தைக் கடந்தார் சைஃப் அலிகான் வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக அவரைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சைஃப் அலி கான் தரப்பினர், “சைஃப் அலி கான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லீலாவதி மருத்துவமனையின் மருத்தவர் நிராஜ் உத்தமணி, மருத்துவர் நிதின் டாங்கே, மருத்தவர் லீனா ஜெயின் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அவர் நலம் பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்