3
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் கைது கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்