அஜித்தின் விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று வெளியாகிறது!

by smngrx01

அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (16) வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் படத்தை விநியோகிக்கவுள்ளது.

முன்னதாக பொங்கல் வெளியீடாக திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

எனினும், வெளியீட்டுத் திகதியானது கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிற்போடப்பட்டது.

எவ்வாறெனினும், எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி அன்று விடாமுயற்சி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகும் ட்ரெய்லர்வெளியீட்டுடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“விடாமுயற்சி” ஹொலிவுட் படத்தின் “பிரேக்டவுன்” படத்தின் ரீமேக்காக உள்ளமையினால், முன்னதாக பதிப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் இருந்தன.

ஆனால் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சிக்கல் தீர்க்கப்பட்டது, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியீட்டுத் தயாரிப்புகளை விரைவுபடுத்த அனுமதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்