4
இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர் சண்முகநாதன் திபாகரன் காலமானார்! இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர் “இசைக் கலைமணி” சண்முகநாதன் திபாகரன் இன்று (15) காலமானார்.
கொழும்பு கட்புல அரங்காற்றுகை கலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய இவர் யாழ். இராமநாதன் நுண்கலைக் கழகப் பட்டதாரி ஆவார்.
உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இணுவில் கிழக்கு மஞ்சத்தடி மற்றும் கொழும்பில் வசித்து வந்தார்.
பல்வேறு இசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்வுகள், பரதநாட்டிய அரங்கேற்றங்களில் வயலின் இசைக்கலைஞராக சிறப்புற பங்குபற்றிய சண்முகநாதன் திபாகரனின் மறைவுக்காக கலைஞர்களும் பல முக்கியஸ்தர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.