தமிழீழம்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு ; மக்கள் அவதானம் Posted on January 15, 2025 at 15:44 by தென்னவள்
3 0
மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
எனவே குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்கள் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளது.
Previous Post
Next Post