on Wednesday, January 15, 2025
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழக்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்கள் செங்கலடியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்து பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவை பகுதியில் எதிர்பக்கமாக முச்சக்கரவண்டியை திருப்பும் போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரும் மூன்று பல்கலை மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.