மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய தைக்குளிர்த்தில் சடங்கு ! on Wednesday, January 15, 2025
(ஸோபிதன்)
மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகி தாயாரின் தைக்குளிர்த்தில் சடங்கு நேற்று ( 14 ) வெகு விமர்சையாக நடைபெற்றது.
செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் இடம்பெறும் பிரதான சடங்குகளில் தைக்குளித்தில்சடங்கு நேற்றைய தினம் ( 14) வெகு விமர்சையாக நடைபெற்றது
அந்தவகையில் வருடாவருடம் தைப்பொங்கல் தினமான நேற்று ( 14 ) மாலைவேளையில் நெல்லுக்குற்றுதல் பூஜையுடன் ஆரம்பமாகி விநாயகர்பானை வைத்தல், அம்மன் குளிர்த்திப்பாடல் பாடுதல் போன்ற பாரம்பரிய பத்ததி முறைப்படி அம்மனின் திருக்குளிர்த்தில் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இச் சடங்கு பெருவிழாவானது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இச் சடங்கு பெருவிழாவானது ஆலய கட்டாடியார் தேவராசா ஐயாவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.