பெரும் மோதல் இழுபறிகளுக்கு மத்தியில் முன்னாள் தென்கொரிய அதிபர் கைது!

by smngrx01

தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யூனை ஏற்றிச் சென்ற வாகன அணிவகுப்பு, அவரது இல்லத்தை விட்டு வெளியே செல்வதைக் கண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி 10:33 மணிக்கு (01:53 GMT) புலனாய்வாளர்கள் யூனுக்கான கைது வாரண்டைச் செயல்படுத்தினர் என்று கூறப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியைஅறிவித்த பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் நாட்டிலேயே கைது செய்யப்பட்ட முதல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஆவார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துவிட்டதாகவும், தன்னை விசாரிக்கும் நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கும் நீதிமன்றங்களுக்கோ அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என்றும் யூன் 3 நிமிட காணொளியில் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல், தனக்கு எதிரான வழக்கை நடத்தும் ஊழல் விசாரணை அலுவலகத்தில் ஆஜராக ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்.

சிஐஓ முன் ஆஜராக முடிவு செய்தேன், இது சட்டவிரோத விசாரணையாக இருந்தாலும், விரும்பத்தகாத இரத்தக்களரியைத் தடுக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்ததாகக் கூறினாார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துவிட்டதாகவும், தன்னை விசாரிக்கும் நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கும் நீதிமன்றங்களுக்கோ அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்