செல்வம் தேசியத்தலைவர்?

by wp_shnn

நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியை அடுத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அடுத்து உள்ளுராட்சி தேர்தலை இலக்கு வைத்து செயற்பட தொடங்கியுள்ளது.

அவ்வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக அவரது கட்சியினர் கதைகளை அவிழ்த்து விடத்தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் தமிழ் தேசிய கட்சி உட்பட 7 பங்காளி கட்சிகளை உள்ளடக்கிய வகையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி செயல்பட்டு வருகின்றது.

தற்போது அதன் தலைமைத்துவம் இணைத்தலைமைகளாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த வாரம் வவுனியாவில் இடம் பெற்ற கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஒற்றை தலைமையின் கீழ் தமிழ் தேசியக் கூட்டணியை செயல்பட வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்க தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கநாதனை தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்; சார்பில் செயலாளர் தற்போது நியமிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் செல்வம் அடைக்கல நாதனை தலைவராக நியமிப்பது தொடர்பில் பேசப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

இதனிடையே நடந்து முடிந்த நாடர்ளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தையே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்