4
முத்துஐயன்கட்டு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று இரவு திறக்கப்பட்டுள்ளன .
மக்கள் எச்சரிக்கையாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழை நாளையும் தொடரும்.இரணைமடு நீர்த்தேக்கத்தின் கதவுகள் அவசியம் ஏற்படின் திறக்கப்படும், மேலும் தண்ணிமுறிப்பு நீர்த்தேக்கம் வான்பாயக்கூடும்.குளங்களின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக விவசாயிகள் விழிப்புடன் இருங்கள்.
மாடுப்பண்ணையாளர்கள், உங்கள் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும். வெள்ள அபாயத்திற்கான தகவல்களை பின்பற்றவுமெனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.