6
2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளது.
சிகரெட்டுகள் மூலம் வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.