by 9vbzz1

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் – இந்துக் குருமார் அமைப்பின் தைப்பொங்கல் வாழ்த்து இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும் என இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்துக் குருமார் அமைப்பு சார்பில் அதன் தலைவர் “சிவாகமகலாநிதி”. சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் ஆகியோர் இணைந்து அனுப்பி வைத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். இன்று மங்கலச்சிறப்புடன் தைத்திங்கள் மலர்ந்துள்ளது. ஒரு இனத்தின் அல்லது ஓர் குழுவினருடைய பண்பாட்டினையும் கலாசார விழுமியங்களையும் தொண்மையையும் அவர்கள் கடைப்பிடித்து வரும் விழாக்கள் பண்டிகைகள் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

தமிழர்களின்,

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை என்பன கூறி நிற்கின்றன.

பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினையும் பிரதானமாக எடுத்துக் காட்டுகின்றது.

பல்வேறு சிறப்புகளை தன்னகத்தேயுடைய தமிழ் மக்கள் பல இன்னல்களை, துன்பங்களை சுமந்தவர்களாவே காணப்படுகிறாகள். தற்காலத்தில் எமது இளம் சமுதாயத்தில் பல்வேறு புறழ்வுகளை காண்பது வேதனையே.

இவற்றிலிருந்து நாம் மீண்டு உயர்வு பெற இறை பிரார்த்தனையுடன் தன்னம்பிக்கையும் அவசியமாகும். இறை வழிபாட்டையும் திருமுறைகளின் உயர்வினையும் எமது இளம் சமூகத்தினருக்கு அதிகம்  வழங்குவோம்.

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும் என இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்