தூய்மை இலங்கை திட்டம்-முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு அறிவிப்பு!

by smngrx01

தூய்மை இலங்கை திட்டம் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அமைச்சகங்களிடமிருந்தும் முன்மொழிவுகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோரியுள்ளார்.

இது தொடர்பாக, ஒவ்வொரு அமைச்சகத்திலும் வெவ்வேறு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் தற்போது அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குப் பதிலாக புதிய திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், தூய்மை இலங்கை திட்டம் மற்றும் ஒவ்வொரு அமைச்சகமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்து அமைச்சுகளில் உள்ள பணியாளர் மட்ட அதிகாரிகளுக்குச் சென்று விளக்கமளிப்பார்கள் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ள

புதிய திட்டங்கள் அடங்கிய அறிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஒவ்வொரு அமைச்சகத்தையும் தனித்தனியாக வரவழைக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்