by admin

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி : ஒருவர் கைது யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நிதி நிறுவனத்தில் பயணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நீதிமன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த நிதி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விரிவான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்