5 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
அம்பாறையில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன.