கொள்ளளவை எட்டியுள்ள 27 நீர்த்தேக்கங்கள்

by guasw2

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அம்பாறையில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று நிரம்பி வழியும் நிலையில் உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் ஒன்று கொள்ளளவை எட்டியுள்ளதுடன் , மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் இரண்டு நிரம்பி வழியும் நிலையை அண்மித்துள்ளது.

அத்துடன் பொலன்னறுவையில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில் எந்த நீர்த்தேக்கங்களும் கொள்ளவை எட்டாத நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 05 நீர்த்தேக்கங்களில் இரண்டு தற்போது கொள்ளளவை எட்டியுள்ளன.

இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவுகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரை 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.

அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம்:
– வெலிமடை
– பசறை
– ஹாலீஎல
– பதுளை

கண்டி மாவட்டம்:
– மெததும்பர
– பாததும்பர
– உடுதும்பர

குருநாகல் மாவட்டம்:
– ரதீகம

மாத்தளை மாவட்டம்:
– உக்குவலை
– ரத்தோட்டா

நுவரெலியா மாவட்டம்:
– வாலப்பனை
-ஹங்குரான்கெத்த

தொடர்புடைய செய்திகள்