4
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு ! on Monday, January 13, 2025
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு இந்த விசேட வாய்ப்பு கிடைக்கிறது.
அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் வௌிநபர்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகள், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.