காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது ! on Monday, January 13, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் நாவற்குடா, கல்லடி, பாலமுனை, காத்தான்குடி, தாளங்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களிடமிருந்து 4 கிராம் 590 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 40 பொதிகளில் வைக்கப்பட்ட கேரள கஞ்சா, 21,000 மில்லி லீற்றர் கசிப்பு பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.