சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே கடத்தியுள்ளார் வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தவுலகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (12) மாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே இந்த சிறுமியை கடத்தியுள்ளார் என்றும், அவ்விருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான இணக்கத்தை இருவீட்டாரும் முதலில் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமியின் தந்தை பின்னர் விருப்பமின்மையை தெரிவித்துள்ளார். இதனால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது