சிறிலங்கா
Posted on January 12, 2025 at 09:54 by நிலையவள்
1 0
புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர்களும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ. ஆர்.எம்.எஸ்.ராஜகருணா, கௌரவ. மேனகா விஜேசுந்தர, கௌரவ. சம்பத் பி. அபேகோன், மற்றும் கௌரவ.எம்.எஸ்.கே.பி.விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவும் கலந்துகொண்டார்.
Previous Post
Next Post