2
அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு கச்சா அரிசியும் 101,000 மெட்ரிக்தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அரசாங்கம் முதலில் அனுமதி வழங்கியது, பின்னர் காலக்கெடுவை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீட்டித்தது