4
on Sunday, January 12, 2025
By kugen
No comments
நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
You may like these posts