மோட்டார் சைக்கிள்களை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது ! on Sunday, January 12, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலஹேனவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 1.750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 28 வயதுடைய காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்கேதநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், இவர் பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையமை தெரியவந்துள்ளது. குறித்த சந்கேதநபர் மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் வழங்கு வந்துள்ளார்.
அதன்படி காலி, பேருவளை மற்றும் பொத்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருடப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்