தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் கைது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர டி சில்வா நேற்றிரவு இரத்மலானையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கல்கிசை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இரு குழுக்களும் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது, தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா என்கிற சங்கு என்பவரும், அவரது தாக்குதலில் காயமடைந்த ரத்மலானே சுத்தா மற்றும் மற்றொரு நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்