by adminDev

கோப் குழுவின் தலைவராக வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீர தெரிவு பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முதன்முறையாக வியாழக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கூடிய போது தலைவர் தெரிவு இடம்பெற்றது.

குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீரவின் பெயரை ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ வழிமொழிந்தார்.

தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய கோப் குழுவின் புதிய தலைவர், குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாகவும், எதிர்காலத்தில் பக்கச்சார்பின்றி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்