12 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி

by adminDev

on Saturday, January 11, 2025

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் தாயார், மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக வைத்திய சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், சிறுமி குறித்த மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை அறிய பொரளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்