by adminDev

தமிழ்​நாடு அறநிலை​யத்​துறை என்ற பெயர் மாற்​றத்தை ஒருபோதும் ஏற்றுக்​கொள்ள முடி​யாது இஸ்​லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்​களை​யும் அறநிலை​யத்​துறை​யின் கீழ் இணைக்க செல்​வப்​பெருந்தகை வலியுறுத்து​வாரா என இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்​கு​மார் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

தமிழக அரசி​யலில் நாள்​தோறும் இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் மீது ஏதேனும் ஒரு விவாதம் பரபரப்​பாகி கொண்​டிருக்​கிறது. அந்தவகை​யில், இந்து சமய அறநிலை​யத்​துறை​யில் பல்வேறு முறை​கேடுகள் நடக்​கிறது. இந்துக்​களுக்கு எதிராக அந்த துறை செயல்​படு​கிறது என்ற குற்​றச்​சாட்டுக்களை முன்​வைக்​கும் அண்ணா​மலை, பாஜக ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை என்ற ஒன்று இருக்​காது என தொடர்ச்​சியாக பேசி வருகிறார்.

அதேநேரம், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்சர் பி.கே.சேகர்​பாபு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு​தான், பல ஆண்டு​களாக திருப்​பணிகள் மேற்​கொள்​ளப்​படாமல் இருந்த கோயில்​களில் திருப்​பணிகள் மேற்​கொண்டு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது. பல ஆயிரம் கோடிரூபாய் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்​பாளர்​களிடம் இருந்துமீட்​கப்​பட்​டுள்ளது என கூறி வருகிறார்.

இந்நிலை​யில் தற்போது, இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் பெயரை, தமிழ்​நாடு அறநிலை​யத்​துறை அல்லது திருக்​கோ​யில் நலத்​துறை என மாற்ற வேண்​டும் என்று செல்​வப்​பெருந்தகை சட்டப்​பேர​வை​யில் வலியுறுத்​தி​யிருப்​ப​தற்கு, இந்து அமைப்​பினர் கண்டனம் தெரி​வித்து வருகின்​றனர்.

இதுகுறித்து இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்​கு​மார் கூறிய​தாவது: வரலாற்று பெட்​டகங்​களாக நிலைபெற்றிருக்​கும் கோயில்​களில், நிர்​வாகத்தை மேற்​பார்​வை​யிட, கிழக்​கிந்திய கம்பெனி காலத்​தில் இருந்தே, கோயில்கள் அரசு ஆளுகை​யின் கீழ் இருந்​ததாக வரலாறுகள் பதிவு செய்​கின்றன. அக்காலத்​தில், கோயில்கள் ஒரு சிலரின் கட்டுப்​பாட்​டில் இருந்​த​தால், கோயில்களை நிர்வாக மேற்​பார்​வை​யிடு​வதற்காக ஆங்கிலேயர்கள் இத்துறையை ஏற்படுத்​தினர்.

அந்தவகை​யில், இத்துறை கோயில்​களின் நிர்​வாகத்தை மட்டுமே மேற்​பார்​வையிட வேண்​டும். ஆனால், அவர்கள் கோயில் வழிபாட்​டில் தலையிடு​கின்​றனர். கோயில் வருமானத்தை சுரண்​டு​கின்​றனர். கோயில் வருமானத்தை கோயில்​களுக்கு செலவிடாமல் மற்ற விஷயங்​களுக்காக செலவிடு​கின்​றனர். அனைத்து மதங்​களுக்​குமான அரசு என்றால், இஸ்லாமிய சமய அறநிலை​யத்​துறை, கிறிஸ்தவ சமய அறநிலை​யத்​துறைகளை உருவாக்கி​யிருக்க வேண்​டும்.

ஆனால், இந்து கோயில்களை மட்டும் நிர்​வாகம் செய்​வதும், இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களை கண்டு​கொள்​ளாமல் இருப்​பதும் எந்த வகையில் நியா​யம், இந்து கோயில்​களைப் போல இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை அறநிலையத் துறை​யின் கீழ் இணைக்க அரசிடம் செல்​வப்​பெருந்தகை வலியுறுத்து​வாரா, அவரது பேச்சு, இந்து மதத்​துக்கு எதிராக காங்​கிரஸ் இருக்​கிறது என்பதை தெளிவுப்​படுத்து​கிறது.

தமிழகத்​தில் இப்போதையை சூழலில், இந்து சமய அறநிலையத் துறை​யின் பெயரை மாற்றுவது தான் அவர்​களுக்கு பிரச்சினையா, இந்து சமய அறநிலை​யத்​துறை பெயரில் இருந்து ஏன் ‘இந்து’ என்ற வார்த்​தையை எடுக்க மும்​முரம் காட்டுகிறார்கள். தமிழகத்​தில் இருக்​கும் கோயில்கள் அனைத்​தும் மன்னர்​களாலும், இந்துக்​களாலும் உருவாக்​கப்​பட்​டது. இந்துக்​களின் மரபை அழிப்​ப​தி​லும், உடைப்​ப​தி​லும்​தான் திமுக, காங்கிரஸின் சிந்​தாந்​தமாக உள்ளது. தமிழ்​நாடு அறநிலை​யத்​துறை என்ற பெயர் மாற்​றத்தை ஒருபோதும் ஏற்றுக்​கொள்ள முடி​யாது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்​தப்பன் கூறும்​போது, ‘இந்து அறநிலைத்​துறை​யில் மொத்த சொத்து எவ்வளவு என்பதை ஏன் இதுவரை அறநிலை​யத்​துறை வெளி​யிட​வில்லை. நீதி​மன்​றங்​களில் நடந்​து​வரும் வழக்​கு​களை​யும் விரைவாக நடத்தி இதுவரை மீட்​கப்​பட்ட சொத்து​கள், இன்னும் மீட்​கப்பட வேண்டிய சொத்துகள் எவ்வளவு என்பதை வெளியிட வேண்​டும்.

அதேபோல், எல்லா சொத்து​களை​யும் எளிதாகக் கண்டு​பிடிக்​கும் வகையிலும், மோசடி பத்திரப்​ப​திவுகளை தடுக்​கும் வகையிலும் எல்லா சொத்து​களுக்​கும் ஒரே சர்வே எண், வலைதளத்​தில் ஏற்படுத்​தும் முறை எந்த அளவில் உள்ளது, வெளி​நாட்​டிலிருந்து எத்தனை சிலைகள் மீட்​கப்​பட்​டுள்ளன, இந்து சமயத்​தினை வளர்க்​கும் பொருட்டு புதிதாக வெளி​யிடப்​பட்​டுள்ள நூல்கள் எத்தனை?

எத்தனை பழமையான இந்து சமய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்​பட்​டுள்ளன, எத்தனை நூல்கள் கணினிமய​மாக்​கப்​பட்​டுள்ளன என்​ப​தை​யும் பொது வெளி​யில் வெளியிட வேண்​டும். மேலும், தமிழக அரசின் தகவல் அறி​யும் உரிமை சட்ட வலை​தளத்​தில், எந்த ஒரு இந்து அறநிலை​யத்​துறை அதிகாரி​யின் அலு​வல​க​மும் இணைக்​கப்​பட​வில்லை. அதை​யும் இணை​க்​க வேண்​டும்​’’ என்​றார்.​

தொடர்புடைய செய்திகள்