by adminDev

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட ஆளுநரிடம் பிரேமலதா மனு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்​.ரவியிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மனு அளித்தார்.

ஆளுநரை சந்தித்த பின் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் பெண்​களுக்கு பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும். கஞ்சா, போதை கலாச்​சா​ரத்தை ஒழிக்க வேண்​டும். மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிட வேண்​டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்​துள்ளேன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்​தில் காவல் துறை பெரிய அளவில் கவனம் செலுத்​தவில்லை. இந்த வழக்​கில் முதல் தகவல் அறிக்கையே 4 மணி நேரம் கழித்து​தான் பதிவு செய்திருப்​பதாக ஆளுநர் தெரி​வித்​தார். கைதான ஞானசேகரன் திமுக அனுதாபி என்று முதல்வரே ஒப்புக்​கொள்​ளும்​போது, அவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்​பார்​கள். ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்​டும்.

பொங்கல் தொகுப்​பில் ரூ.1,000 சேர்த்து கொடுக்​ககூட திமுக அரசால் முடிய​வில்லை. ‘தேர்தல் வரும்​போது பார்த்​துக் கொள்​ளலாம்’ என்று சட்டப்​பேர​வை​யில் வாய் கூசாமல் சொல்​கிறார் அமைச்சர் துரை​முரு​கன். அடுத்த ஆண்டு தேர்தல் வரும்​போது ரூ.1,000 கொடுத்து ஓட்டு வாங்கி வென்று மீண்​டும் ஆட்சிக்கு வந்து​விடலாம் என திமுக​வினர் மனக்​கோட்டை கட்டு​கின்​றனர். அவர்​களது எண்ணம் பலிக்​காது. மக்கள் தெளிவாக உள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்​பேரவை தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எல்லா இடைத் தேர்​தல்​களை​யும் சந்தித்த ஒரே கட்சி தேமு​திக. ஆனால் தற்போது இடைத் தேர்​தல்கள் ஜனநாயக ரீதியாக நடப்​ப​தில்லை. திமுக ஆட்சி​யில் நடப்பவை அராஜக இடைத் தேர்​தலாகத்​தான் இருக்​கும். எனவே, இ​தில் தே​மு​திக நிலைப்​பாடு குறித்து ஓரிரு நாளில் அறி​விப்​போம். இவ்​வாறு கூறினார்​.

தொடர்புடைய செய்திகள்