மோடி வரவிற்காக மாலைகள் தயார்?

by sakana1

இந்தியாவிற்கு எதிராக பேசி ஆட்சி கதிரையேறிய அனுர அரசு இந்திய பிரதமரை வரவேற்க சலுகைகளை அறிவிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது.

கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற ஜனாதிபதி, இந்திய பிரதமர் மோடியுடன் ஈடுபட்ட கலந்துரையாடலில் எட்கா உடன்படிக்கை, இருநாடுகளுக்கு இடையிலான நிலத் தொடர்பு, திருகோணமலை எண்ணெய் குதங்கள், காங்கேசன்துறை துறைமுகம், இருநாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, சுற்றுலா அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்புகள், இறக்குமதி, ஏற்றுமதி, தொழில்நுட்ப பரிமாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

இருவரும் இணைந்து வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் அந்த விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், எட்கா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுகளை தொடர்ந்து கொண்டுசெல்லவும் திட்டமிட்டிருந்தனர்.

எட்கா தொடர்பில் குறித்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கையில் எதிர்க்கட்சிகளுக்கு பேசு பொருளாகியுள்ளது.

எனினும் எட்கா உடன்படிக்கை உட்பட ஏனைய திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுகள் விரைவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக பேச்சுகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை எட்ட இருநாடுகளும் கலந்துரையாடல்களை பல கோணங்களில் ஆரம்பித்துள்ளன்.

அத்துடன் மோடியின் பயணத்தின் போது சில முக்கிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நோக்கில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றது.

தொடர்புடைய செய்திகள்